தில்லியில் வாகன விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் அடக்கம்
புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்பம்: புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்யப்பட்டு புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆர்.பிரபாகரன் (33). இவர் புதுதில்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக உள்ளார். இவர் ஜூன் 15 ஆம் தேதி அதிகாலையில் பணி முடித்துவிட்டு ராணுவ குடியிருப்புக்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தில்லி கண்ட் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த கல் மீது பைக் மோதி, நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இறந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடலுக்கு மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள்.
இதில், ராணுவ வீரர் பிரபாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தகவல் அறிந்து சக ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரபாகரனை மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ராணுவ வீரர் இறந்ததை உறுதி செய்தனர்.
இதுபற்றி ராணுவ வீரர் மனைவி திவ்யா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து ராணுவ தலைமை இடத்திலேயே உயிரிழந்த ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினார்.
கம்பத்தில் ராணுவ வீரர் பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் ராணுவ வீரர் உடலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வழியாக திருச்சிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை அதிகாலையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு சுருளிப்பட்டி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்தனர்.
அதன் பின்பு உடல் எரியூட்டப்பட்டது, மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் ஆய்வாளர் ஹ.செந்தில் குமார் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.