தற்போதைய செய்திகள்

புதுவையில் ஜூன் 25-ல் அமைச்சரவை பதவி ஏற்பு?

DIN

புதுச்சேரியில் ஜூன் 25 அல்லது 27-ஆம் தேதியில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக இணைந்த தே.ஜ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. என்.ஆர் காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராகவும், பாஜக பொதுச்செயலாளர் ஆர். செல்வம் சட்டப்பேரவை தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

 இதனையடுத்து அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகி வருகிறது.
 என்.ஆர் காங்கிரஸுக்கு 3 அமைச்சர் பதவிகளும், பாஜவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் என்று பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அமைச்சர் பதவிகளை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவுக்கு வராமல் நீண்ட தாமதம் நிலவி வருகிறது.

குறிப்பாக பாஜகவில் இரு அமைச்சர் பதவிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
 இந்த நிலையில் அமைச்சர்கள் பெயர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் தயாராகி உள்ளதால், அந்த பெயர் பட்டியலை முதல்வர் என். ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து (திங்கள் கிழமை)இன்று மாலை வழங்க உள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஜூன்-25ஆம் தேதி அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வத்திடம் கேட்டபோது,
புதுவைக்கான அமைச்சரவை பட்டியல் இன்று மாலைக்குள் துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்குவார் என்றும், வரும் ஜூன் 25ம் தேதி அல்லது 27 ஆம் தேதி அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.

அதற்குப் பின்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டு பேரவைத் துணை தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.  இதனால் நீண்ட கால தாமதமாகி வரும் புதுவை அமைச்சரவை பதவி ஏற்பு, இந்த வாரத்தில் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT