மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தொழிலாளர்கள். 
தற்போதைய செய்திகள்

மன்னார்குடியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் விவசாய சங்கங்கள் , தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் - விவசாயிகள் விரோத போக்கினை கண்டித்து, சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

DIN


திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாய சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் - விவசாயிகள் விரோத போக்கினை கண்டித்து, சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மன்னார்குடி மேல ராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் . தொமுச மாவட்டச் செயலர் கே.எஸ். மகாதேவன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோரிக்கைகள்: பெட்ரோல் , மத்திய அரசு டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின் மசோதாவை கைவிட வேண்டும் . கருத்துரிமை - ஜனநாயக உரிமைகளை பறிக்கக் கூடாது.

இதில், தொமுச போக்குவரத்து தொழிலாலர்கள் சங்க கிளைத் தலைவர் எஸ்.சதீஸ்குமார் , ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நகரச் செயலர் எஸ்.எஸ். சரவணன், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலர் கோவிந்தராஜ் , விவசாய சங்க நிர்வாகிகள் வி.எம். கலியபெருமாள் , ஜி.மாரிமுத்து, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT