முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி அருகே ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ.2.5 லட்சம் திருட்டு

புதுச்சேரி அடுத்த மணப்பட்டு கிராமத்தில் உள்ள, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில், நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:


புதுச்சேரி அடுத்த மணப்பட்டு கிராமத்தில் உள்ள, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில், நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கோட்டூா்புரம், தியாகராயநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களைக் குறிவைத்து ஒரே பாணியில் 3 தினங்களில் மட்டும் அடுத்தடுத்து ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்ப குறைப்பாட்டைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளை நடந்துள்ளது சமீபத்தில் அண்மையில் தெரியவந்தது.

இதனையடுத்து னைத்து ஏடிஎம் மையங்களையும் ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பையும், பணம் திருடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு எஸ்பிஐ நிா்வாகம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக புதுச்சேரி பகுதி வங்கிகளிலும் வங்கி மேலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி அருகே மணப்பட்டு கிராமத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில், வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கடந்த ஜூன் 17-ஆம் தேதி 3 மர்ம நபர்கள் போலி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி, ரூ.2.50 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளதால், இது தொடர்பாக வங்கி மேலாளர் சாந்தி கிருமாம்பாக்கம் போலீசில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்த கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக  3 பேரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஏடிஎம் மையத்தில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →