தற்போதைய செய்திகள்

பிரேசில்: 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

DIN


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,893 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,15,985-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, புதிதாக 64,903 பேருத்து கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,513,305-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 9.66 கோடிக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 2.53 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. 

உலகில் கரோனா தொற்றுக்கு அதிகயளவில் உயிரிழந்தவர்களில் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்  உள்ளது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT