முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

ஏப்.2 மதுரை பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பங்கேற்பு

மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
கோப்புப்படம்
பகிர்:

மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →