தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 
தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 116 இடங்களிலும், அதிமுக கூட்டணி 73 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு  வாழ்த்துகள். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன் என்று அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT