சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும்: தமிழக அரசு

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக உத்தரவிட்டுள்ளது. 

DIN


தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக உத்தரவிட்டுள்ளது. 

அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT