5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தென்மண்டல ஐஜியாக அன்பு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக பிரவீன்குமார் அபிநபுவும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு ஐஜியாக பவானீஸ்வரியும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக வித்யா ஜெயந்த் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை நகர் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.