ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரணம் ரூ.50 லட்சம்: ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினி

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கினார். 

DIN

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கினார். 

தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''கரோனாவைத் தடுக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வெளியில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

கரோனா நிவாரண நிதியாக பல்வேறு தரப்புகளிலிருந்து தமிழக அரசிற்கு உதவும் வகையில் நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே நடிகர்கள் அஜித்குமார், சூர்யா - கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோர் கரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தற்போது நிதி வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

SCROLL FOR NEXT