அருப்புக்கோட்டை கிளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முக்கியச்சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டபோது. 
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் சமூகத்தொண்டு அமைப்பு சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கல்

அருப்புக்கோட்டை கிளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முக்கியச்சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டபோது.

DIN



அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் விதமாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது விருதுநகர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விவசாயஅணி மாவட்டத் தலைவர் கோகுல் தலைமை வகித்தார். அப்போது,பொதுமக்கள் புழக்கம் உள்ள முக்கியச்சாலை சந்திப்பான ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 300க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. அத்துடன் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு இலவச உணவுப்பொட்டலங்களும் வழங்கப்பட்டன. உடன் இந்நிந்கிழச்சியில் விஜய் மக்கள் இயக்க அருப்புக்கோட்டை கிளைச் செயலாளர் பிரபு, பொருளாளர் கிருஷ்ணக்குமார்,மாவட்டத் துணைத்தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT