கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார். 
தற்போதைய செய்திகள்

சாலை விபத்து: கார் கவிழ்ந்து இரு பெண்கள் பலி

புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்களின் கார் கவிழ்ந்து இரு பெண்கள் உயிரிழந்தனர்.

DIN


புதுக்கோட்டை:  புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்களின் கார் கவிழ்ந்து இரு பெண்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கருக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சிக்கு திருமண நிகழ்வுக்காக காரில் புறப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில், புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் கைனாங்கரை பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த பொலிரோ பிக்அப் வேன் டயர் வெடித்து நிலைகுலைந்து, இந்தக் கார் மீது மோதியது.

இதில், சாலையில் இருந்து இறங்கிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த கருக்காகாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் மனைவி ஆரோக்கிய மலர்விழி (40) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மார்ட்டின்ராஜ் மனைவி ஞானபால் இனிகோமேரி (38), பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பகலில் உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த அருள்தாஸ் தாடையில் காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மாத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT