சிதம்பரம் தனியார் பள்ளி சார்பில் பிராணவாயு செறிவூட்டும் இயந்திரம், ரூ.36638 நிவாரண நிதி
சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இணைந்து தங்களது சேமிப்பிலிருந்து பங்களிப்பு செய்து சிதம்பரம் அரசு மருத்துவமனை கரோனா நோயாளிகள் பயன்பாட்டிற்காக
சிதம்பரம்: சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இணைந்து தங்களது சேமிப்பிலிருந்து பங்களிப்பு செய்து சிதம்பரம் அரசு மருத்துவமனை கரோனா நோயாளிகள் பயன்பாட்டிற்காக உயிர்காக்கும் பிராணவாயு செறிவூட்டும் இயந்திரம், தமிழக முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.36,638க்கான காலோலை ஆகியவற்றை சிதம்பரம் உதவி ஆட்சியர் லி.மதுபாலனிடம் சனிக்கிழமை வழங்கினர்.
மேலும் இந்தக் கொடிய தொற்று காலகட்டத்தில், பள்ளியின் இரு வாகனங்கள் அவசரகால ஊர்தியாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஏ.அரிகிருஷ்ணன், முதல்வர் ஏ.லதா, பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவர் சுந்தர்கணேஷ், கண்காணிப்பாளர் பாரிவள்ளல் ஆகியோர் பங்கேற்று மேற்கண்ட நிவாரண உதவி மற்றும் பிராணவாயு செறிவூட்டு இயந்திரத்தை உதவி ஆட்சியரிடம் வழங்கினர்.