ஜெய்பீம் ’செங்கேணி’ பார்வதி அம்மாவுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி 
தற்போதைய செய்திகள்

ஜெய்பீம் ’செங்கேணி’ பார்வதி அம்மாவுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.

DIN

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.

சமீபத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இந்தத் திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனைத் தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்,

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சென்னையில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். 

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT