தற்போதைய செய்திகள்

நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

நடிகர் சூர்யாவைத் தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

நடிகர் சூர்யாவைத் தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இந்தத் திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனைத் தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகக் கூறி பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி நடிகர் சூர்யாவை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்ட பிரபலங்கள் அவருடன் நிற்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT