முகப்பு
தற்போதைய செய்திகள்

நவ.21இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

நாடாளுமன்ற  குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
அண்ணா அறிவாலயம்
பகிர்:

நாடாளுமன்ற  குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது கூட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →