கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை த்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை த்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஐ.ஈஸ்வர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என்.மணிவண்ணன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார் சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT