முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 
தற்போதைய செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மேடைக் கலைவாணர் என்.நன்மாறன் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் மறைந்தார்.

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் திரு. நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT