முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 29 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 29 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,65,452 -ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 29 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 2,047 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 25,11,076-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 20,217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,44,903 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →