முகப்பு
தற்போதைய செய்திகள்

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு
பகிர்:

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் இயக்குநர் மணிகண்டன்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களால் அவர் விலகினார். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.