முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 30 செப்டம்பர் 2021, 7:18 pm IST
தமிழகத்தில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,612 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (செப்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

Advertisement

புதிதாக 1,612 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,63,789-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,578-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,11,061-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,52,785 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.