ஜெயக்குமார் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

DIN

சென்னை: சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் வாக்குப்பதிவின் போது அதிமுகவினரால் தாக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை தண்டையார் பேட்டை காவல்   நிலையத்தில்  ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தண்டையார்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT