தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் 3 ஆவது நாளாக வனப் பகுதியில் பற்றி எரியும் தீ

DIN

கொடைக்கானலில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வனப் பகுதிகளில் காட்டுதீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம் உள்ளதாக வன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவில் பனியின் தாக்கம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதனால் வனப் பகுதிகளிலுள்ள மரங்கள், புற்கள் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக எளிதில் தானாக தீ பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல் காட்டுத் தீ கடந்த மூன்று நாள்களாக பெருமாள்மலை, வெள்ளப்பாறை, மயிலாடும்பாறை பகுதி, மச்சூா் பகுதி உள்ளிட்ட வனப் பகுதிகளில் பற்றி எரிந்து வருகிறது.

இதனால் வனப் பகுதிகளிலுள்ள அரிய வகை மூலிகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா். 

இதனிடையே அரிய வகை மரங்களான தோதகத்தி, மலைவேம்பு உள்ளிட்ட மரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதில், வன விலங்குகள் இடம் பெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வனப் பகுதிகளின் அருகிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். 

சுமார் 300 ஏக்கரில் பரவியுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT