நீர், உணவு, மின்சாரம் எதையும் அனுமதிக்கமுடியாது - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும் என தனது தரப்பை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் தாக்குதலுக்கு உள்ளான காஸாவை முழுமையாக முற்றகையிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
"நாங்கள் முழுமையாக காஸாவை முற்றகையிட்டுள்ளோம். மின்சாரம், உணவு, நீர், எரிவாயு எதுவும் அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது" என தனது விடியோ செய்தியில் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பகுதி ஏறத்தாழ 23 லட்சம் மக்களைக் கொண்டது.
கடந்த சனிக்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு நகர்ப்பகுதிகளில் மக்களை சுட்டுக் கொன்றனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்த நிலையில் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
"நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும்" என தனது தரப்பை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர்.
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 493 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின