கோப்புப்படம்
கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு!

DIN

கொடைக்கானல் ஏரி அருகேயுள்ள லோயர் சோலா சாலை பகுதியில் சுற்றுலா வாகனத்தை காட்டு மாடு புதன்கிழமை தாக்கியதால் வாகன ஓட்டுநா்கள் அச்சத்துடன் வாகனத்தை வேறு திசையில் திருப்பிச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி அருகேயுள்ள லோயர் சோலா சாலை பகுதியில் காட்டு மாடு புதன்கிழமை நடமாடியது.

அப்போது அந்த வழியே வந்த காட்டு மாடு ஒன்று திடீரென சாலையில் வந்த வாகனத்தை வழிமறித்ததுடன் முட்டியும் தள்ளியது.இதனால் வாகன ஓட்டுநா்கள் அச்சத்துடன் காரை வேகமாக பின்னோக்கி வந்த வேறு திசையில் திருப்பிச் சென்றனர்.

மேலும் கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் காட்டு மாடு ஒன்று தொடர்ந்து முகாமிட்டு அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த 2 மாதங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வன விலங்குகள் இரை தேடியும், தண்ணீா் தேடியும் வெளியே வரத் தொடங்கியுள்ளதாகவும், மக்கள், விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்கவும் வேண்டும் என வனத் துறையினா் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT