தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைந்தது: பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 52,080-க்கு விற்பனையாகிறது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.6,545-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து பவுன் ரூ.52,360-க்கு மேல் உயா்ந்தது இதுவே முதல்முறை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் வியாழக்கிழமை ரூ.52,360-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.85-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

SCROLL FOR NEXT