தற்போதைய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... பவுனுக்கு ரூ.840 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் சனிக்கிமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.52,920 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயா்ந்து புதிய உச்சமாக ரூ.51,120-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

ஆனால் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT