தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) மிதமான மழை பெய்ய வாய்ப்பு

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணத்தால், வெள்ளிக்கிழமை (ஏப்.12) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு தஞ்சாவூர், நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை. சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

SCROLL FOR NEXT