தற்போதைய செய்திகள்

மிஸ்டர் மனைவி தொடரிலிருந்து விலகிய நாயகி!

மிஸ்டர் மனைவி தொடரிலிருந்து நடிகை ஷபானா விலகியுள்ளார்.

DIN

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என நிணைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும்.

இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.

இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா, செம்பருத்தி தொடரில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஷபானா

இந்நிலையில், நடிகை ஷபானா மிஸ்டர் மனைவி தொடரிலிருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆர்யானுடன் நடிகை ஷபானா.

நடிகை ஷபானாவின் இன்டாகிராம் பதிவில், "மிஸ்டர் மனைவி தொடரிலிருந்து விலகும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். இது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால் இந்த நேரத்தில் நான் எடுத்துள்ள இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி. புதிய புராஜக்ட் மற்றும் புதிய பாத்திரத்தில் என்னுடைய நடிப்பு பயணத்திற்காக காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT