தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

மக்களவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் புதன்கிழமை(ஏப்.17) மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து தோ்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

DIN

புதுச்சேரி: மக்களவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் புதன்கிழமை(ஏப்.17) மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை(ஏப்.19) காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை (ஏப்.17) மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாதவா்கள் பிரசாரத்துக்கு வந்திருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருப்போரைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதற்றமான 232 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 211 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேர்தலையொட்டி புதுச்சேரியில் புதன்கழமை(ஏப்.17) மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருவோருக்கு அது பொருந்தாது.

மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

சட்டம்- ஒழுங்கை பராமரிக்க மண்டல மாஜிஸ்திரேட் 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிகளுக்கே இந்த நிலைமையா? வாடிக்கையாளர் ஆள் மாறாட்ட மோசடி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்!

3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம்! - உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்த மத்திய அரசு

கை நம்மைவிட்டு போகாது; புது அடிமையைத் தேடும் பாஜக! உதயநிதி

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு: மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT