தற்போதைய செய்திகள்

மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானாவுக்கு பதில் இவர்தான்!

மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா விலகியதையடுத்து, நடிகை தேப்ஜானி மொடாக் நடிக்கவுள்ளார்.

DIN

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என நிணைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும்.

இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.

நடிகை ஷபானா, மிஸ்டர் மனைவி தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், இத்தொடரிலிருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேப்ஜானி மொடாக்

நடிகை ஜேப்ஜானி மொடாக் தெலுங்கில் நாக்கவுட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வங்கமொழித் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். வங்கமொழி ஆன்மிகத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் வானத்தைப் போல தொடரில் சந்தியா பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, மிஸ்டர் மனைவி தொடரில் நடிக்கவுள்ள தேப்ஜானி, அஞ்சலி பாத்திரத்திம் மூலம் ஷபானா பிடித்த இடத்தை நிரப்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT