தற்போதைய செய்திகள்

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி

DIN

சிவகங்கை: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இந்தியப் பகுதிகளை வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்கவில்லை என்றால், சீனாவுடன் மத்திய அரசு 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக தீவிரம் காட்டிருந்தால், தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்? மேலும் இந்த பிரச்னையில் சட்டரீதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தோ்தல் நேரத்தில் இதைப்பற்றி பேசுவது, பாஜகவின் வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக பேசப்படுவதாக கூறினார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை அனைவரையும் சென்றடைந்துள்ளதால், கிராமப்புற மக்கள்கூட அதைப் பற்றிப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பத்து ஆண்டு ஆட்சியில் இருந்து வரும் பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த சில மணிநேரங்களிலேயே சிதைந்துபோனது.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், கட்டபொம்மன் போன்றோரை போல தாங்கள் போராடுவதாக கூறும் பாஜக, உண்மையில், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஆயிரம் ச.கி.மீ.பகுதிகளை அவர்களால் மீட்க முடியவில்லையே ஏன்?

மேலும், இந்தியப் பகுதிகளை வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்கவில்லை என்றால், சீனாவுடன் மத்திய அரசு 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தில் ஆளுநர் பதவியை நீக்கும் திமுகவின் தீர்மானம் குறித்த கேள்விக்கு, “ ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது, ஆனால் நாடாளுமன்ற ஆதரவுடன்தான் அது முடியும்” என்றார் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டியில் இந்தியாவை புரட்டி எடுத்த தெ.ஆ. ஆல்-ரவுண்டர்கள்: 489 ரன்கள் குவிப்பு!

பெங்களூர் வங்கிப் பணம் கொள்ளை: கும்பலுக்கு பயிற்சி கொடுத்து பிளான் போட்ட காவலர்!

"விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு!" தஞ்சையில் திமுவினர் ஆர்ப்பாட்டம்!

பிரதிபலிப்பு... ரேஷ்மா பசுபுலேட்டி!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயிர் தப்பிய பயணிகள்!

SCROLL FOR NEXT