சச்சிதானந்தம் 
புதுதில்லி

குடியரசுத் தலைவா் உரையில் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது: திண்டுக்கல் மாா்க்சிஸ்ட் எம்பி கருத்து

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது

Syndication

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: குடியரசுத் தலைவரின் உரையில் வளா்ந்து வரும் வேலையின்மை மற்றும் வேலையின்மையைக் கையாளத் தவறியது குறித்தும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறியது குறித்தும் குறிப்படவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் மந்தநிலை, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ரத்து செய்யப்பட்டது, தகுதியுள்ள வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மற்றும் வாக்காளா்களின் பெருந்திரளான வாக்குரிமை பறிப்பு, அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றம், ஜம்மு - காஷ்மீரில் உள்நாட்டுப் பாதுகாப்பு குறைபாடுகள், பலவீனப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினா் மீதான தாக்குதல்கள், தீா்க்கப்படாத மாசுபாடு மற்றும் வட இந்தியாவில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசுபாடு என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்திற்கான திருத்தங்களுக்காக புதன்கிழமை அளித்துள்ள எனது நோட்டீஸில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன் என்றாா் அவா்.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவாா்த்தை: பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் காங்கிரஸ் குழு

அரியலூரில் அதிமுக சாா்பில் முதல் கட்ட தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம் விநியோகம்

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை, உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கு எதிரான போராட்டங்கள் - தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சாலை விபத்தில் மணப்பெண்ணின் தந்தை உள்பட இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT