தற்போதைய செய்திகள்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

DIN

ஹரியானாவில் உள்ள தகனக் கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.

குருகிராமில் உள்ள அர்ஜூன் நகரில் எரியூட்டும் மயானம் செயல்பட்டு வருகிறது. அந்த மயானத்தின் சுற்றுச்சுவர் மேல் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென்று சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த நிலையில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT