சித்தார்த் - ஸ்ரேயா ஜோடி. 
தற்போதைய செய்திகள்

புதிய தொடரில் இணையும் நிஜ ஜோடி!

சித்து - ஸ்ரேயா நடிக்கும் புதிய சீரியல்.

DIN

புதிய தொடரில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இத்தொடரில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதனிடையே, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி -2 தொடரில் சித்து நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி தொடரில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

நட்சத்திரத் தம்பதிகளான சித்து - ஸ்ரேயாவுக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம். இவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ரீல்ஸ்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் சில நாள்களாக இருவரும் எந்த ஒரு தொடரிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது புதிய தொடரில் இணையவுள்ளனர்.

சித்தார்த் - ஸ்ரேயா

திருமணம் சீரியலை தொடர்ந்து, மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரொன்றில் சித்து - ஸ்ரேயா ஜோடி இணைந்து நடிக்கவுள்ளனர்.

புதிய தொடரின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இத்தொடரின் பெயர், முன்னோட்டக்காட்சி, ஒளிபரப்பு நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT