அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை!
இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.
தற்போதைய செய்திகள்அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை!
இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று(ஆக. 2) இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.