பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் நேர்த்தி கடன் செலுத்தும் பக்கதர்கள்.  
தற்போதைய செய்திகள்

ஆடிப்பெருக்கு - பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை(ஆகஸ்ட் 3) கொண்டாடப்பட்டது. பெண்கள் சிறப்புவழிபாடு செய்தனா்.

Venkatesan

கோவை: கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை(ஆகஸ்ட் 3) கொண்டாடப்பட்டது. பெண்கள் சிறப்புவழிபாடு செய்தனா்.

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.

இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் இல்லத்தில் ஆற்றங்கரைகளில் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதுண்டு.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் பக்கதர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

அதிகயளவில் பொதுமக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் காவல்துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT