பயிற்சியில் விமானப்படையினர்  
தற்போதைய செய்திகள்

சூலூரில் விமானப்படை கூட்டு போர்ப்பயிற்சி துவக்கம்!

சூலூா் விமானப்படை தளத்தில் இந்தியா - பிரான்ஸ் விமான படையின் கூட்டு போர்ப்பயிற்சி இன்று தொடங்கியது.

DIN

இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் விமானப்படை கூட்டு போர்ப்பயிற்சி சூலூரில் இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் சூலூா் விமானப் படை தளத்தில் தரங் சக்தி 2024 விமானப் படையின் கூட்டுப் போர் பயிற்சி ஒருவாரம் நடைபெறுகிறது. இந்தியப் பாதுகாப்புத்துறையின் சாா்பில் முப்படைகளின் சாா்பில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போர் விமானங்கள்

முதன்மை நேட்டோ நாடுகள் மற்றும் இந்திய விமானப்படையும் இணைந்து தரங் சக்தி 2024 என்ற விமானப் படையின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.

அதன்படி, சூலூர் விமானப்படை தளத்தில் ஐந்து நாடுகளின் கூட்டு விமானப்படை பயிற்சி இன்று(ஆக.6) துவங்கியது இதில் பல்வேறு வகையான விமானங்கள் ரப்பில் டைப்பூன், தேஜஸ், சுகாய் 30 ஆகிய விமானங்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.

இந்தப் பயிற்சி கோவை சூலூா் விமான படை தளத்தில் இன்று (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட்14-ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெற இருக்கிறது.

இந்தப் போர் பயிற்சி மூலம் ஒரு விமானிகளின் தனித்திறமை, கூட்டுப்படை பயிற்சி ஆகியவை மேம்பட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT