புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (50). இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகள் உடன் கடந்த 7 ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அவர்கள் தங்கியிருக்கும் அறையை செக் அவுட் செய்யும் நேரம் என்பதால் விடுதி ஊழியர் வெகு நேரமாக கதவை தட்டி பார்த்த போது அவர்கள் கதவை திறக்கவில்லை.

இதையடுத்து மாற்றுச் சாவி கொண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விடுதி ஊழியர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT