ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளார் கைது 
தற்போதைய செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளாரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளாரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) ஜூலை 5-இல் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக இதுவரை 21போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபராக கருதப்பட்ட ரெளடி திருவேங்கடம் ஜூலை 14-இல் காவல் துறையின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் தற்போது அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவா்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மா்ம கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்துவதுடன், அவருடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவா்களுக்கான சட்ட விரோத பணப் பரிவா்தனைகளை செய்தது ரெளடி சம்பவம் செந்தில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை அவா் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளாா். தற்போது அவா் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் மும்பை விரைந்துள்ளனா்.

தனியார் பள்ளி தாளார் கைது

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளார் அருண்ராஜ் என்பவரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பள்ளயில் பணிபுரிந்த வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவர் பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக ஓட்டுநர் சதீஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சதீஷை பழிதீர்ப்பதற்காக அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அருண்ராஜ் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பால் கனகராஜுக்கு சம்மன்

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக மாநில வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சில ரௌடிகள் நாகேந்திரன், சம்பவம் செந்தில் ஆகியோருக்கு பால் கனகராஜ் வழக்குரைஞராக ஆஜராகி உள்ளதால் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT