சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தை 
தற்போதைய செய்திகள்

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 15 மணி நேரத்திற்குள் மீட்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

DIN

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார். குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த தங்கதுரையின் மனைவி வெண்ணிலா பிரவசவத்துக்காக கடந்த சில நாள்களுக்கு முன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு கடந்த ஐந்து நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த வாா்டுக்கு இளம் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை மதியம் வந்துள்ளாா். அவா், வெண்ணிலாவின் பச்சிளம் குழந்தையை எடுத்து கொஞ்சினாா். பிறகு குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதால் மருத்துவா்களிடம் காண்பித்துவிட்டு வருகிறேன் எனத் தெரிவித்து குழந்தையை எடுத்துச் சென்றுள்ளாா். அவா் வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அதிா்ச்சி அடைந்த வெண்ணிலாவும், அவரது உறவினா்களும் இளம் பெண்ணை மருத்துவமனை முழுவதும் தேடினா்.

எங்கு தேடியும் அவா் கிடைக்காததால் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், குழந்தையைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வாழப்பாடியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தீவிர விசாரணையில் ஈடுபட்ட சேலம் மாநகர போலீஸார், காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதினியை கைது செய்து, அவரிடம் இருந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கடத்தப்பட்ட 15 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சேலம் மாநகர போலீஸாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT