படம் | AP
தற்போதைய செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 126 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த அமெரிக்கா!

பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா 126 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது.

DIN

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் நிலையில், அமெரிக்கா 126 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது.

சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது.

போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம் பிடித்தன. இதில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. பரம எதிரியான சீனாவைவிட 35 பதக்கங்கள் அதிகம் பெற்றுள்ள அமெரிக்கா தங்கப் பதக்க எண்ணிக்கையில் 40 பதக்கத்தை பெற்று சீனாவை சமன் செய்துள்ளன.

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. சீனா கடைசியாக 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் 48 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்காவை விட 12 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் 27 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஆஸ்திரேலியா 18 தங்கப் பதக்கங்களுடன் நான்காவது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 16 தங்கப் பதக்கங்களுடன் 5-ஆம் இடத்தையும், நெதர்லாந்து 15 தங்கப் பதக்கங்களுடன் ஆறாவது இடைத்தையும், பிரிட்டன் 14 தங்கப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தையும், கொரியா 13 தங்கப் பதக்கங்களுடன் எட்டாவது இடத்தையும், இத்தாலி, ஜெர்மனியும் தலா 12 தங்கப் பதக்கங்களுடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.

இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆா்ஜென்டீனா, எகிப்து, துனீசியா தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT