அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!
இரவு 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தற்போதைய செய்திகள்அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!
இரவு 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு அதாவது இன்று(ஆக. 12) இரவு 10 மணி வரை தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.