சிதம்பரம்: கொள்ளிடத்தில் தடுப்பணையும், வெள்ளாற்றில் கதவணையும் கட்ட வலியுறுத்தி சிதம்பரம், புவனகிரியில் கடையடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மற்றும் புவனகிரி வர்த்தகர் சங்கத்தினர் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ஏ.வி. அப்துல்ரியாஸ் ஆகியோர் தெரிவித்தது:
கொள்ளிடம் ஆற்றில், கருப்பூர் (கடலூர் மாவட்டம்) - மாதிரிவேளூர் (மயிலாடுதுறை மாவட்டம்) இடையே கதவணை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கதவணை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதேபோல், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள, கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றில் தடுப்பணைக்கட்டும் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது என்றனர்.
கடையடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. பின்னர் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.