உக்ரைனுடனான சண்டையில் ரஷியா. DIN
தற்போதைய செய்திகள்

ரஷியாவின் மூன்று மாகாணங்களிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க்மாகாணங்களில் வசிக்கும் இந்திய மக்களுக்கு அறிவுறுத்தல்.

DIN

ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சமீபத்திய சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புவோர் +7 965 277 3414 என்ற எண்ணையோ அல்லது edu1.moscow@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறியுள்ளது.

ரஷியாவின் குா்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் ஊடுருவலைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT