கோட் திரைப்படம் படம்: எக்ஸ்
தற்போதைய செய்திகள்

இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்: வெங்கட் பிரபு பதிவு!

நடிகர் விஜய்யின் கோட் டிரைலர் குறித்த அறிவிப்பு.

DIN

இன்னைக்கு கண்டிப்பா வந்துடும் என்று இயக்குநர் வெங்கட் பிரவு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் பதிவின் மூலம் கோட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஸ்பெயினில் மாபெரும் பேரணி!

பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? -தேஜஸ்வி யாதவ் பதில்!

அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு அனுப்பி வைத்தவர் தினகரன்: ஆர்.பி. உதயகுமார்

மே.வங்கத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி!

பல அஜித்குமார் பலியாக நேரிடும்! திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

SCROLL FOR NEXT