அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீராங்கனை விஷ்மி குணரத்னே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) ஒருநாள் தொடர் தொடங்கியது. இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடி வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இருப்பினும், அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனையான விஷ்மி குணரத்னே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்றையப் போட்டியில் சதமடித்ததன் மூலம் இலங்கை அணிக்காக புதிய சாதனை ஒன்றை விஷ்மி குணரத்னே படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.