கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.

DIN

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே பச்சை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, பின்னர் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும்.

இருப்பினும், விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரையிலும், புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் இயக்கப்படும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்துக்குப் பிறகு, ”தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம்

பருவ மழை: சாலைகளில் தேங்கிய மழைநீா், பொதுமக்கள் அவதி

பிகாா்-ஒருங்கிணைப்பு இல்லாத எதிா்க்கட்சிகள்!

சங்கராபுரம் மணியாற்றில் வெள்ளப் பெருக்கு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT