கோப்புப்படம் DIN
தற்போதைய செய்திகள்

செப். 8-ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு

DIN

தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்களான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு தலா ஒரு நியாயவிலைக் கடை என சோதனை அடிப்படையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் உணவுப் பொருள்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், எடை குறைவின்றி விரைவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமானது, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT