மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 நாட்களுக்குப் பிறகு 119.76 அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 நாட்களுக்குப் பிறகு 119.76 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 12,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,563 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,12,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 8 நாட்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து 119.76 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.08 டிஎம்சியாகவும் இருந்தது.